மலர் செடியொன்று
நீ உதிர்த்த
புன்னகைக்கு ஈடாய்
தன் மலரை உதிர்த்து
கடன் தீர்த்து கொண்டது!
மலரை நீ சூடிக்கொண்ட போது
உன் புன்னகையை மலர்
சூடிக்கொண்டது!
எது பேரழகென
விவரிக்கமுடியாமல்
வெட்கிக்கொண்டது
காற்று!
அன்றைய தினம்
அழகான தினமென்று
தன் நாட்குறிப்பில்
குறித்துக்கொண்டது
நிகழ்காலம்!
நல்லா இருக்கு..அதை விட அழகா இருக்கு கவிதை..
ReplyDelete