Thursday, August 12, 2010

அரூபமாய்... சில மரங்கள்

புகலிடம்
தேடியழைந்த சிட்டுக்குருவிக்கு
என் வீட்டு பரணில்
அமைந்ததோர் வாழிடம்
இரண்டு வெண்கல பாத்திரங்கள்,
பழைய புத்தக மூட்டைகள்
மரச்சாமான்கள்
என அனைத்தையும் தாண்டி
வேரிடுகிறது
இலை, கிளை ஏதுமின்றி
அரூபமாய் ஒரு மரம்!

ஆனந்த விகடனில் பிரசுரமான எனது கவிதை

1 comment:

  1. நல்லாயிருக்கு.. எழுத்துப்பிழைகளை சரிசெய்யலாமே..

    ReplyDelete